ஞாயிறு, 29 மார்ச், 2015

கிரிக்கெட் காய்ச்சலை தடுப்பது எப்படி?

டெங்கு, பன்றி வகையறாக்களைப் பின்னுக்குத் தள்ளி ஊரெல்லாம் கிரிக்கெட் காய்ச்சல் அடித்துக் கிடக்கையில், பூனைக்குட்டி மட்டும் கண்ணை மூடிக் கொண்டு உலகமே இருட்டு என்று சொன்னால்... எப்பூடி? ஜோதியில் ஐக்கியமாக வேண்டாமா? ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகள் இணைந்து நடத்திய  பத்தாவது உலகக்கோப்பை கிரிக்கெட் களத்தில் இருந்து... ஆனால், கிரிக்கெட்டு வெளியே சில சம்பவ பதிவுகளை பகிர்ந்து கொள்ள கடமைப்பட்டுள்ளது  பூனைக்குட்டி. ஆக்லாந்து நகரில் மார்ச் 24ம் தேதி நடந்த நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா முதலாவது செமி பைனல் துவங்குவதற்கு சில நிமிடங்கள் முன்னதாக  இந்தக் காட்சி பதிவானது. இனி, களத்துக்கு வெளியே...


‘பங்களா’தேஷை வீடு கட்டி அடிக்கணும்!


‘‘பிளஸ் 2 பரிட்சையை கோட்டை விட்டாக்கூட... அட்டம்ட் அடிச்சி பாஸ் பண்ணிடலாம். கோப்பையை கோட்டை விட்டா... அஞ்சு வருஷமில்ல காத்திருக்கணும். அதனால, பரிட்சை கூட போயிட்டுப் போகுது. அடுத்த வாட்டி பாத்துக்கிடலாம். இன்னிக்கு, கிரிக்கெட்டுல பாஸ் பண்ணா போதும் கடவுளே...’’ -  பங்களாதேஷ் அணிக்கு எதிரான காலிறுதிப் போட்டி தினத்தன்று காலையில் டோனி அணிக்காக நடக்கிறது ஸ்பெஷல் துவா. இடம்: சூரத், குஜராத் மாநிலம்.

ச்சும்மா... தீயா வௌயாடணும்!


‘சாமி, மந்திரத்தை செத்த ஸ்ட்ராங்கா சொல்லுங்கோ. மேக்ஸ்வெல்லுனு ஒருத்தன் பின்னி எடுக்கறானாம். ஆஸ்திரேலியாக்காரங்கள சுருட்டி வீசிட்டு, கப்பை  சும்மா கப்புனு புடிச்சிட்டு வரணும் புள்ளையாண்டனுங்க...’’ - செமிபைனலில் ஆஸ்திரேலியாவை வதம் செய்தவதற்காக நடக்கிறது ஸ்பெஷல் யாகம். இடம்:  அகமதாபாத், குஜராத் மாநிலம்.

நீ ‘கோ’ன்னு சொன்ன... நான் கிளம்பி வந்துட்டேன்!


கொஞ்சம் தெளிவா சொல்லித் தொலையப்படாதா? ‘கோ இண்டியா... கோ’ன்னு படத்தைப் பார்த்ததும், ரோஷக்காரப்பசங்க இடத்தைக் காலி பண்ணி  கிளம்பி வந்திட்டாங்க. - ஆஸ்திரேலியாவுக்கு எதிரான செமிபைனலில் ஜெயிப்பதற்காக வாழ்த்து தெரிவித்து ஒடிஷா மாநிலம், பூரி கடற்கரையில் மணல் சிற்பம்  செதுக்கி வைத்திருக்கிறார்கள்.

‘கோலி இப்டி அடிச்சிருக்கலாம்ல?’


‘மிஸ் பண்ணீடாதீங்க... மிஸ்!’ - டிவியை ஆப் பண்ணி விட்டு, நேரடியாக களத்தில் இறங்கி விட்டார்கள் பள்ளிக்கூட டீச்சர்ஸ். இடம்: பைகானேர், ராஜஸ்தான் மாநிலம்.

‘போய் புள்ளகுட்டியப் பாருங்க பாஸ்...!’


‘நான் அடிக்கிற மாதிரி அடிப்பேனாம்... நீங்க அழுவறது மாதிரியே அழுவணுமாம்? டீல் ஓ.கே.வா?’ - பிரசன்ட் தலைக்கும், ஃபியூச்சர் தலைக்கும், களத்துக்கு  வெளியே நடக்கிறது ‘மோதல்’. - மெல்போர்ன் ஆடுகளத்தில், பயிற்சி நேரத்தின் போது.

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

2 கருத்துகள்:

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...