செவ்வாய், 17 மார்ச், 2015

வினையும்... எதிர்வினையும்!

முள்ளை முள்ளால் எடுக்கிற டெக்னிக் எல்லா நேரங்களிலும் சரியாக இருக்காது. தீவிரவாதம் என்பது மனித நாகரீகங்களுக்கு அப்பாற்பட்ட, கடுமையாக ஒடுக்கப்பட வேண்டிய விஷயம் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது. ஆனால், இவ்வளவு கொடூரமாக ஒடுக்கப்படவேண்டுமா...? பதைபதைக்க  வைக்கிற... இங்கே உள்ள படங்களைப் பாருங்கள். மனித உரிமை மீறல் என்பார்கள் நடுநிலையாளர்கள். தப்பே இல்லை என்பார்கள் பாதிக்கப்பட்டவர்கள்.  எது சரி... எது தப்பு என்று படங்களை பார்த்து விட்டு... உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.



பாகிஸ்தான் நாட்டின், லாகூரில் உள்ள ரோமன் கத்தோலிக்க தேவாலயம்,
கிறிஸ்ட் தேவாலயங்களில் ஞாயிறு சிறப்புப் பிரார்த்தனைகள் (15 மார்ச் 2015) நடந்து  கொண்டிருந்தன. அத்துமீறி உள்ளே நுழைந்த தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த இரு வாலிபர்கள், வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததில் ஆண், பெண், குழ ந்தைகள் என 15 பேர் உடல் சிதறி இறந்தனர். 80க்கும் அதிகமானவர்களுக்கு படுகாயம்.
அந்த இடமே கொதிநிலையில் இருந்தது. மனித வெடிகுண்டுகளாக  வந்த தீவிரவாதிகளுடன் கரம் கோர்த்து வந்த மேலும் இரு இளைஞர்கள் அங்கிருந்த மக்கள் கையில் வசமாக சிக்கி விட்டனர். அதற்கடுத்து நடந்தவை மகா  கோரம்.


ர்ச் வளாகம் அருகே திரண்டிருந்த நூற்றுக்கும் அதிகமான மக்கள், மர்ம ஆசாமிகளை மடக்கிப் பிடித்து கண்மூடித்தனமாக தாக்குகின்றனர். அடி என்றால்... சாதாரணமானது அல்ல. கல், தடி, இரும்புக் கம்பி என்று கையில் சிக்கியதை எல்லாம் எடுத்து விளாசுகின்றனர்.


மிருகவெறித் தாக்குதல் என்ற வார்த்தைக்கான நிஜ அர்த்தம் இது. தீவிரவாத வெடிப்பில், தங்கள் உறவினர்களை, குழந்தைகளை, பெற்றோரைப் பறிகொடுத்த  ஆத்திரம். கண்மண் தெரியாத அளவுக்கு வெறியாக வெளியே பீறிட்டுக் கிளம்புகிறது.


டி தாங்கமுடியாமல் குற்றுயிரும், கொலையுயிருமாக கிடப்பவர்களை உயிருடன் எரிக்க திட்டமிடுகிறது கொதிநிலையில் இருக்கிற கும்பல். உடலில்  பெட்ரோல் ஊற்றியப் பிறகு, தீக்குச்சியை பற்ற வைக்கிறார் ஒருவர்.


ரு வாலிபர்களையும் நடுத்தெருவில் போட்டு எரித்து விட்டு... எக்காள முழக்கமிடுகிறார்கள்.

ந்தப் படங்கள் உணர்த்துவது என்ன? நீங்கள் உணர்ந்து கொள்வதென்ன? குண்டு வைத்தவர்கள் யார்; சிதறிச் செத்தவர்கள் யார் என ஆராய்ந்து, அதற்கு  மதச்சாயம் பூசுகிற முயற்சி... மேலும் சில குண்டுவெடிப்புகளுக்கன்றி, வேறெதற்கும் பயன்படாது. தீவிரவாதிகளுக்கோ, தீவிரவாதத்துக்கோ மதம் கிடையாது.  அவர்கள் ஒட்டுமொத்தமாக மதங்களுக்கும், மனிதத்துக்கும் எதிரானவர்கள்.

தீவிரவாதம் என்பது வினை என்றால்... இந்த எதிர்வினைக்கு என்ன பெயர்?
நீங்களே சொல்லுங்கள்.

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

1 கருத்து:

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...