வியாழன், 5 மார்ச், 2015

வால்பாறையும்... சில யானைகளும் (பயணத்தொடர்)

ழகான மேற்குத் தொடர்ச்சி மலையின் உச்சியில் இருக்கிறது வால்பாறை. மலைப்பிரதேசமான இங்கு அழகுக்கு மெய்யாகவே பஞ்சமில்லை. ஒரு சுற்றுலாப்  பயணியாக, கொண்டாடி விட்டு வருவதற்கு மிக உகந்த இடம். ஆனால், கொண்டாட்டங்கள் மட்டும்தானா வாழ்க்கை? இந்த அழகிய மலைப்பிரதேசத்தில்  வாழ்கிற மனிதர்கள்... (மட்டுமல்ல, மிருகங்களும் கூட) ஒரு நாள்பொழுதை நகர்த்திக் கழிக்க எவ்வளவு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது? அதை  பதிவு செய்வதும் கூட, சுற்றுலாவின் ஒரு மறைபகுதி. அதையும் பதிவு செய்கிற போதுதான் ஒரு பயணம், முழுமையான பயணமாகிறது.

வாழ்க்கை என்பது பயணங்களால் ஆனது. பயணம் என்பது நகர்வு. மரமும், செடியும் நகர முடியாது. உள்ளபடியே, பயணப்பட அவற்றுக்கு வாய்ப்பில்லை.  மனிதனுக்கு அது சாத்தியம். பயணங்கள் வாயிலாக அவன் படித்துக் கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கின்றன. பயணங்கள் வாயிலாக உள்ளுணர்ந்து கொள்கிற விஷயங்களை, வேறெந்த வகைகளிலும் அவன் அறிந்து / தெரிந்து / உள்வாங்கிக் கொள்ள வாய்ப்பே இல்லை. வால்பாறையும்... சில யானைகளும் என்கிற  இந்த பயணத்தொடர், திட்டமிடல்கள் இன்றி உருவானது.

ஒரு நாள் பயணமாக சென்றபோது, போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, மேலும் சில நாட்கள் அந்த குளுகுளு மலைப்பகுதியில் தங்குவதற்கான கட்டாய காரணம் உருவானது. அந்த சில நாட்கள் தந்த அனுபவம், அதற்கு முன் கிடைத்திராதது.
வால்பாறை பகுதி மக்களைப் பற்றி  அறிந்து கொள்ள அனேகம் வாய்ப்பு கிடைக்கலாம்.
விலங்குகளைப் பற்றி...? அங்கு உள்ள தேயிலைத் தோட்டங்களைப் பற்றி...?

வால்பாறை மலையின்  தேயிலை தோட்டங்கள், யானைகள், சிறுத்தைகள், சிங்கவால் குரங்குகளை... இந்தத் தொடர் மிக நெருக்கமாக உங்களிடம் அறிமுகப்படுத்துகிறது. ‘பூனைக்குட்டி’  வலைத்தளத்தில் ஆறு  பாங்களாக வந்த இந்தத் தொடரின், முழுமையான தொகுப்பு இங்கே...

ஒவ்வொரு பாமாக, ஒரே இடத்தில் படிக்க வாய்ப்பு தருகிறது பூனைக்குட்டி. படித்துப் பாருங்கள். கருத்துச் சேருங்கள்.* குங்குமம் வார இதழில் வந்த வால்பாறை அவலங்கள் குறித்த கட்டுரையை படிப்பதற்கான இணைப்பு:


- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

1 கருத்து:

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...