ஞாயிறு, 29 மார்ச், 2015

கிரிக்கெட் காய்ச்சலை தடுப்பது எப்படி?

டெங்கு, பன்றி வகையறாக்களைப் பின்னுக்குத் தள்ளி ஊரெல்லாம் கிரிக்கெட் காய்ச்சல் அடித்துக் கிடக்கையில், பூனைக்குட்டி மட்டும் கண்ணை மூடிக் கொண்டு உலகமே இருட்டு என்று சொன்னால்... எப்பூடி? ஜோதியில் ஐக்கியமாக வேண்டாமா? ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகள் இணைந்து நடத்திய  பத்தாவது உலகக்கோப்பை கிரிக்கெட் களத்தில் இருந்து... ஆனால், கிரிக்கெட்டு வெளியே சில சம்பவ பதிவுகளை பகிர்ந்து கொள்ள கடமைப்பட்டுள்ளது  பூனைக்குட்டி. ஆக்லாந்து நகரில் மார்ச் 24ம் தேதி நடந்த நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா முதலாவது செமி பைனல் துவங்குவதற்கு சில நிமிடங்கள் முன்னதாக  இந்தக் காட்சி பதிவானது. இனி, களத்துக்கு வெளியே...

சனி, 28 மார்ச், 2015

இனிக்கிற வலி எது?

தொடை இலக்கணம் நிறையப் பேருக்கு பிடித்திருக்கிறது. அதிலும், எதுகை - மோனை மேட்டர். காரணம் இருக்கிறது. கிராமம் முதல் நகரம் வரை அனைத்து சென்டர் மக்களின் பேச்சிலும் அன்றாடம் புழங்குகிற விஷயம் இது. ‘‘எள்ளு எண்ணெய்க்கு காயுது; எலிப்புழுக்கை என்னத்துக்கு காயுது? அகப்பட்டவனுக்கு அட்டமத்துல சனி...’’ - காது வளர்த்த நமது பாட்டிகள் இலக்கண, இலக்கியமெல்லாம் தெரியாமலேயே, வயக்காட்டு வரப்புகளில் போகிற போக்கில் எதுகை, மோனை பின்னி எடுப்பார்கள், கவனித்திருக்கிறீர்களா? இலக்கியத்தை புத்தகங்களில் படித்து ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கும் நமக்கு, இயல்பாய் அவர்களிடம் இருந்து வந்து விழுகிற எ / மோ வார்த்தைகள் நிரம்ப வியப்பு தரும்.

ஞாயிறு, 22 மார்ச், 2015

ஊதா கலரு ரிப்பன்... உனக்கு யாரு அப்பன்?

ன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது
- இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இந்த திருக்குறளுக்கும்....
சித்தூர தாண்டுனா காட்பாடி
சிவாஜிய தொட்டா டெட்பாடி
- இந்த மெகா சூப்பர் வசனத்துக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. முன்னது இலக்கியம். பின்னது ‘கலக்’கியம். இலக் / கலக்கியங்களை இணைக்கிற விஷயம்... மோனை. முதல் எழுத்து ஒன்றி வந்தால் அது மோனை என்று கடந்த வாரம் படித்தோம். (அன்பும் அறனும் - ‘அ’னாவுக்கு ‘அ’னா; பண்பும் பயனும் - ‘ப’னாவுக்கு ‘ப’னா மோனை. சித்தூர... சிவாஜிய - ‘சி’னாவுக்கு ‘சி’னா மோனை.) தொடை இலக்கண சப்ஜெக்ட் கடந்த வாரம் ஆரம்பித்தது. அதில் நான்கு பிரிவுகள் (மோனை, எதுகை, முரண், இயைபு) இருக்கிறது என்றும் பார்த்தாச்சு. முதலில் தொடை இலக்கணம் பற்றி ஒரு பறவைப் பார்வை பார்க்கலாம். அப்புறம் உள்ளே புகுந்து ஆராயலாம். ஓகே?

சனி, 21 மார்ச், 2015

தபால் ஊழியர் போராட்டம் எதற்காக?

ஸ் ஸ்டிரைக், வங்கிகள் ஸ்டிரைக் என்றால்... ஒட்டுமொத்த தேசமும் பதறுகிறது. பேச்சுவார்த்தைக்கு கதறுகிறது. நம்மைச் சுற்றி, பத்து நாட்களையும் கடந்து ஒரு வேலைநிறுத்தப் போராட்டம் ஓசையின்றி நடந்து கொண்டிருக்கிறதே... அது (குறைந்தபட்சம்) நமது கவனத்தையாவது எட்டியிருக்கிறதா? கிராமப்புற அஞ்சலக ஊழியர்கள் பிச்சை எடுத்தும், அரைநிர்வாணமாக நின்றும், பட்டை நாமம் போட்டும்... இன்னும் என்னென்ன வழிமுறைகள் இருக்கிறதோ, அத்தனை முறைகளிலும் போராட்டம் நடத்தித்தான் பார்க்கிறார்கள். யாரும் திரும்பிப் பார்த்தபாடில்லை. எதற்காக இவர்கள் போராடுகிறார்கள்? இவர்களது பிரச்னைகள் என்ன? கோரிக்கைகள் என்ன? அவை நியாயமான கோரிக்கைகள்தானா? போராட்டத்தின் முழுமையான பின்னணி என்ன? மிக விரிவான அலசல், பேட்டிகளுடன் உங்கள் ‘பூனைக்குட்டி’ இன்றைக்கல்ல... 2014, மார்ச் 3ம் தேதியே (திங்கள் கிழமை) ‘2.50 லட்சம் தபால் ஊழியர்களின் கண்ணீர் கதை’ என்ற தலைப்பில் கட்டுரை பதிவு செய்திருக்கிறது. கூடுதல் தகவல்களுடன் அந்தக் கட்டுரை மீண்டும் உங்கள் பார்வைக்கு...

செவ்வாய், 17 மார்ச், 2015

வினையும்... எதிர்வினையும்!

முள்ளை முள்ளால் எடுக்கிற டெக்னிக் எல்லா நேரங்களிலும் சரியாக இருக்காது. தீவிரவாதம் என்பது மனித நாகரீகங்களுக்கு அப்பாற்பட்ட, கடுமையாக ஒடுக்கப்பட வேண்டிய விஷயம் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது. ஆனால், இவ்வளவு கொடூரமாக ஒடுக்கப்படவேண்டுமா...? பதைபதைக்க  வைக்கிற... இங்கே உள்ள படங்களைப் பாருங்கள். மனித உரிமை மீறல் என்பார்கள் நடுநிலையாளர்கள். தப்பே இல்லை என்பார்கள் பாதிக்கப்பட்டவர்கள்.  எது சரி... எது தப்பு என்று படங்களை பார்த்து விட்டு... உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.

சனி, 14 மார்ச், 2015

சித்தூர தாண்டுனா காட்பாடி; சிவாஜிய தொட்டா டெட்பாடி

‘வாடா எம் மச்சி... வாழக்கா பஜ்ஜி...’ என்று அதகளமான தலைப்பே இந்த வாரம் என்ன மேட்டர் என்பதை சொல்லி விட்டது - இப்படி நிறையப் பேர் தொடர்பில் வந்து தலைப்பு சஸ்பென்ஸை தகர்த்தார்கள். உண்மைதான். ‘ஏ டண்டணக்கா... ஏ டணக்குணக்கா; நிம்மிய கண்டா கும்மியடிப்பேன்... ரம்மியக் கண்டு விம்மி வெடிப்பேன்...’ என்று அடுக்கு மொழி வசனங்களை அள்ளித் தட்டி, எதுகை மோனை இலக்கணம் பற்றி எழுதுகிற வேலையை ரொம்பவே சுலபப்படுத்தி வைத்திருக்கிறார் டி.ஆர். சப்ஜெக்ட்டுக்குள் போவதற்கு முன்பாக ஒரு விஷயம்.

சனி, 7 மார்ச், 2015

வாடா எம் மச்சி, வாழக்கா பஜ்ஜி...!

மிழ் உணர்வு அதிகம் இருப்பதாகக் காட்டிக் கொள்வதற்காக சுத்த தமிழ் சொற்களை தேடிப் பிடித்து பயன்படுத்துபவர்களை நிறையப் பார்த்திருக்கலாம். ‘நல்லதா ஒரு கைபேசி வாங்கணும் அய்யா... வீட்டில் இருக்கிற தொலைபேசி பழுதாகிப் போச்சு...’ - ஒழுங்கா பேசியிருந்தால் கூட, அவர் தமிழ் உணர்வு மீது சந்தேகம் வந்திருக்காது. தொலைபேசி, கைபேசி என்று தப்புத் தப்பாகப் பேசி தனக்குத்தானே டெபாசிட் பறிகொடுத்து விட்டார். சரி. தொலைபேசி, கைபேசி... சரிதானே? இதில என்ன தப்பு என்று கேள்விக்குறி எழுப்புவீர்களேயானால்... அடுத்த பாராவில் இருக்கிறது ஆன்ஸர்.

வியாழன், 5 மார்ச், 2015

வால்பாறையும்... சில யானைகளும் (பயணத்தொடர்)

ழகான மேற்குத் தொடர்ச்சி மலையின் உச்சியில் இருக்கிறது வால்பாறை. மலைப்பிரதேசமான இங்கு அழகுக்கு மெய்யாகவே பஞ்சமில்லை. ஒரு சுற்றுலாப்  பயணியாக, கொண்டாடி விட்டு வருவதற்கு மிக உகந்த இடம். ஆனால், கொண்டாட்டங்கள் மட்டும்தானா வாழ்க்கை? இந்த அழகிய மலைப்பிரதேசத்தில்  வாழ்கிற மனிதர்கள்... (மட்டுமல்ல, மிருகங்களும் கூட) ஒரு நாள்பொழுதை நகர்த்திக் கழிக்க எவ்வளவு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது? அதை  பதிவு செய்வதும் கூட, சுற்றுலாவின் ஒரு மறைபகுதி. அதையும் பதிவு செய்கிற போதுதான் ஒரு பயணம், முழுமையான பயணமாகிறது.

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...