புதன், 5 நவம்பர், 2014

கண்ணை தாக்கும் ‘சென்ஐ!’

சிகப்பு பொதுவாக புரட்சியின் நிறமாகக் குறிப்பிடப்படுவதுண்டு. பழைய கால சினிமாக்களில் ‘என் குடும்பத்தை அழிச்ச ஒன்ன பழிவாங்காம விடமாட்டேன்டா...’ என்று கேப்டன் ஆத்திரப்படுகையில், சிகப்பு பெயிண்ட் பூசியிருப்பார்களோ என்று சந்தேகம் கொள்ளத்தக்க வகையில் அவரது கண்கள் சிவ ந்திருக்கும். கண்கள் சிவக்கையில், கேப்டன் போலவே இருக்குதே என்று சந்தோஷம் வேண்டாம். நல்ல கண் டாக்டரை பார்த்தல் அவசியம். காரணம்,  ஊரெல்லாம் ‘சென்ஐ’ (மெட்ராஸ் பெயரை மாத்தி எவ்ளோ நாளாச்சு! இன்னும் என்ன மெட்ராஸ் ஐ?) எனப்படுகிற கண் வலி படையெடுத்துப் பரவி  வருகிறது.



ந்த சீசனில் எல்லோருக்கும் மிக முன்பாகவே எனக்கு ‘அது’ வந்து விட்டது. மிக முன்பாகவே என்றால்... அநேகமாக செப்டம்பர் கடைசியிலேயே. அப்போது ‘சென்ஐ’ தனது தாக்குதலை துவக்கியிருக்கவில்லை. எனவே, எனக்கும் ‘அது’தான் வந்திருக்கிறது என்ற சந்தேகம் வரவில்லை. சும்மா ஒரு செக்கப்புக்காக  பிரபலமான கண் மருத்துவமனையின் உள்ளூர் கிளைக்குச் சென்றேன். ‘பாத்தா அப்டித்தான் தெரியுது. ஆனா, அது இன்னும் யாருக்கும் வரலையே...’ என்று  சந்தேகப்பட்ட படியே, மருத்துவ உதவியாளர்கள் டாக்டரிடம் அழைத்துச் சென்றனர்.

லைட் ஹவுஸ்களில் இருந்து பாய்கிற வெளிச்சம் போல எனது கண்களில் சக்தி வாய்ந்த ஒளி பாய்ச்சப்பட்டது. பிறகு, வானவெளி ஆராய்ச்சிக்கு பயன்ப டுத்துகிறது போன்றதொரு டெலஸ்கோப் (மைக்ரோ ஸ்கோப்பா? அறிவியலில் - மட்டும் - வீக்) வழியாக எனது கண்களை டாக்டர் மிக நீண்டநேரம் உற்று,  உற்றுப் பார்த்தார். ‘மெட்ராஸ் ஐ...? அது மாதிரியேதான்... இல்லை; இல்லை! அதேதான்!!’ என்று ஒரு சில நிமிட உறுதிப்படுத்தலுக்குப் பின், கன்பார்ம்  செய்தார். பிறகு, கைகளை நன்றாக சோப்புப் போட்டு கழுவிக் கொண்டார்.

தற்கப்புறம் நடந்தது வரலாறு. எனக்கென்று எதுவும் வைத்துக் கொள்கிற பழக்கம் என்னிடம் இல்லையாதலால், அலுவலக நண்பர்கள் பலருக்கும் பகிர்ந்து  வழங்கி மகிழ்வுற்றேன். இன்றைக்கு வரை, அலுவலக நண்பர்கள் சிலர் கண்களில் கருப்புக் கண்ணாடியுடன் ஜேம்ஸ்பாண்ட் போல வலம் வருவதைப் பார் க்கையில்... இதற்கான மையப்புள்ளி நாம்தானோ... என நினைத்து மனம் ஒரு கணம் அலைபாயும். அப்புறம், கருப்புக் கண்ணாடியுடன், இத்தனை ஸ்டைலாக  அலுவலகத்தில் வலம் வர இவர்களுக்கு வேறெப்போது சான்ஸ் கிடைக்கப் போகிறது...? அசத்தட்டும்! அனுபவிக்கட்டும்!! என்று என்னை நானே திருப்திப்  படுத்திக் கொள்கிறேன்.

நான்கு பாராக்கள் முடிந்து விட்டபடியால்... மேட்டருக்கு வரலாம். மெட்ராஸ் ஐ... மெட்ராஸ் ஐ என்று நம்மாட்கள் சொல்கிறார்களே; அந்த மெட்ராஸ் ஐ-யை, மலையாளிகளும், தெலுங்கு, கன்னட... பிற திராவிட, ஆரிய மொழிக் குடும்பத்தாரும் என்ன பெயர் சொல்லிக் கூப்பிடுகிறார்கள்? முதலில் அதைத் தெரிந்து கொள்ளலாம்.

க்கத்து மாநில மக்கள் இதை திருவனந்தபுரம் ஐ, ஐதராபாத் ஐ என்றெல்லாம் பெயர் சொல்லி அழைப்பதில்லை. அங்குள்ள மக்கள் இதை ரெட் ஐ (Red Eye), பிங்க் ஐ (Pink Eye) என்கிறார்கள். எந்த ஊர் டாக்டரானாலும், அவர்கள் இந்த பிரச்னையை conjunctivitis என்ற பெயர் சொல்லியே அழைக்கிறார்கள். கேரள மக்கள், கண் நோய் என்கிறார்கள். இரவிலும் கூலிங் கிளாஸ் அணிந்து திரியும் ஆசாமிகளைப் பார்தால்... ‘அது கண் நோய்.. அவிட போகுயில்ல...’ என்று வார்னிங் கொடுப்பார்கள். திருவனந்தபுரம், பாலக்காடு பகுதிகளில் ‘செங்கண்’ என்றும் இதற்குப் பெயர் இருக்கிறதாம்.

ரி! நம்மூரில் மட்டும் அது ஏன் மெட்ராஸ் ஐ? சென்னை மாகாணமாக - Madras Presidency - இருந்தபோது, 1918களில் இது மெட்ராஸில் கண்டறியப் பட்டதால் மெட்ராஸ் ஐ என்றே பெயர் வைத்து, ‘இதை’ நம்ம மண்ணின் மைந்தன் ஆக்கி விட்டார்கள். அவ்வளவுதான்!

ந்த ‘சென்ஐ’ தாக்குதலில் இருந்து விடுபட சில எளிய வழிமுறைகளை முக புக்  நண்பர்கள் எனக்கு பகிர்ந்திருந்தார்கள். வழக்கம் போல, அதையும் உங்களிடம் பகிர பிரியப்படுகிறேன். முயற்சி செய்து பாருங்கள். பின் / முன் விளைவுகளு க்கு பூனைக்குட்டி பொறுப்பல்ல!

மெட்ராஸ் ஐ என அழைக்கப்படும் விழி வெண்படல அழற்சி பொதுவாக பச்சிளம் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் பாதிக்கிறது. வைரஸ் அல்லது பாக்டீரியாக்களால் உருவாக்கப்படும் இது குழந்தைகளைப் பரவலாக பாதிக்கிறது. கண்ணின் வெள்ளைப் பகுதியில் தோன்றும் இந்த பாதிப்பு, கண்ணையும் இமைகளையும் கலங்கிய வண்ணம் ஈரப்பதத்துடன் வைக்கிறது.

பொதுவாக இந்த பாதிப்பை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். பாக்டீரியா தொற்றினால் வருவது, அலர்ஜி அல்லது ஒவ்வாமையினால் வருவது மற்றும் வைரஸ் தொற்றினால் வருவது. ஸ்டாபிலொகோக்கல் அல்லது ஸ்ட்ரெப்டொகோக்கல் பாக்டீரியாவினால் வருவது பாக்டீரியா தொற்றாகும். தூசு அல்லது புகையினால் வரும் ஒவ்வாமை ஒரு வகை பாதிப்பு. வைரஸ் தொற்றினால் ஏற்படும் பாதிப்பு மற்றொன்று. பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்றினால் ஏற்படும் பாதிப்பு உடனடியாக ஒருவரிலிருந்து மற்றவர்களுக்கு பல்வேறு தொடர்புகள் மூலமாகப் பெரும்பாலும் தூய்மையின்மையின் காரணமாக பரவுகிறது.

மெட்ராஸ் ஐ-யின் அறிகுறிகள்

ண்களில் அதிக நீர்ச்சுரப்பு. கண் சிவத்தல், அரிப்பு மற்றும் வீக்கம். தொடர்ந்த கண் வலி. இமைகளில் காணப்படும் பிசுபிசுப்பு. வெளிச்சத்தில் கண் கூசுதல். வெண்மையான கழிவு காணப்படுதல் (வைரஸ் அல்லது பாக்டீரியா தொற்று). கண்களில் பச்சை அல்லது மஞ்சள் நிற கழிவு (பாக்டீரியா தொற்று).

ரு தூய்மையான துணியை எடுத்து குளிர்ந்த நீரில் (ஐஸ் வாட்டர்) நனைத்து லேசாக பிழிந்து அதனை கண்ணின் மீது போடுங்கள். இதை மாற்றி மாற்றி செய்து வாருங்கள். அவ்வப்போது துணியையும் நீரையும் மாற்றுங்கள்.  இதனால் நோய் குணமாகாது என்றாலும் வீக்கம், அரிப்பு மற்றும் கண் சிவப்பைக் குறைக்க இது ஒரு சிறந்த வழி. 

வெதுவெதுப்பான பால் மற்றும் தேனை சம அளவு எடுத்து கலந்துக் கொள்ளுங்கள். இந்த கலவையை சற்று பஞ்சு அல்லது சிறிய கண் குவளையை வைத்து கண்ணைக் கழுவ பயன்படுத்துங்கள். இதனை நீங்கள் கண்ணில் சொட்டு மருந்தாகவும் பயன்படுத்தலாம். சில துளிகளை கண்ணில் விடுவதன் மூலமோ அல்லது இந்த கலவையில் நனைத்த துணியினை கண்களின் மீது வைப்பதன் மூலமோ சற்று நிவாரணம் பெறலாம்.

கொத்தமல்லி கை நிறைய உலர்ந்த கொத்தமல்லியை எடுத்து நீரில் கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அதனை வடிகட்டி குளிர வைக்க வேண்டும். பின்னர் இந்த நீரால் கண்ணை நன்கு கழுவி அழுத்தம் கொடுக்க வேண்டும். இது எரிச்சலையும், வலி மற்றும் வீக்கத்தையும் குறைக்க வல்லது.

சூடான ஒத்தடம் சூடான ரோஸ் எண்ணெய், தாழம்பூ எண்ணெய் அல்லது சீமைச்சாமந்தி எண்ணெயை வைத்து ஒத்தடம் கொடுக்கலாம். அதிலும் 5 முதல் 10 நிமிடங்களுக்கு என ஒரு நாளைக்கு 3 முதல் 4 முறை இதனைச் செய்யலாம். இது பாதிப்பைக் குறைப்பதுடன் தொற்றையும் நீக்கும்.

சீரகம் நீரில் சிறிதளவு சீரகம் சேர்த்து காய்ச்சி அதனை ஆற வைக்கவும். பின்னர் அதனுடன் வடிகட்டி, கண்களை ஒரு நாளைக்கு இரண்டு முறை கழுவவும். இது வலியையும், சிவப்புத் தன்மையையும், எரிச்சலையும் நீக்கும்.

தேனை இரு வகையாக நீங்கள் பயன்படுத்தலாம். முதலில் கண்ணில் சொட்டாக விடலாம் அல்லது இரண்டு கப் சுடுநீருடன் மூன்று ஸ்பூன் தேனைக் கலந்து கண்ணைக் கழுவலாம். குறிப்பாக தண்ணீர் குளிர்ந்தவுடன் உபயோகிக்கவும்.

ருளைக்கிழங்கு வில்லைகளை எடுத்து கண்ணில் பற்று போலப் போடவும். அதிலும் இதனை மூன்று நாட்கள் இரவில் தொடர்ந்து செய்யவும்.
மஞ்சள் இரண்டு ஸ்பூன் மஞ்சள் தூளுடன் ஒரு கப் சுடுநீரைச் சேர்க்கவும். பின்னர் வெதுவெதுப்பாக கண்ணில் அழுத்தி கண்களை சுத்தம் செய்யவும்.
நெல்லிக்காய் ஒரு கப் நெல்லிக்காய் சாற்றுடன் இரண்டு ஸ்பூன் தேனைச் சேர்த்து நாளைக்கு இரண்டு முறை குடிக்கலாம். 
காய்கறி சாறு இந்த கண் தொற்றுக்கு காய்கறிச்சாறு மிகவும் நல்லது. பசலைக் கீரை சாறு 200 மிலி எடுத்து, 300 மிலி கேரட் சாறுடன் சேர்க்கவும். வேண்டுமென்றால் பார்ஸ்லி மற்றும் கேரட் ஆகிய இரண்டையும் மேலே கூறியது போல் கலக்கலாம்.

லுமிச்சை சாற்றினை கண்களின் மேல் தடவி 5 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். எலுமிச்சை சாற்றினை பயன்படுத்தும் போது எரிச்சல் இருக்கும். ஆனால் இந்த செயலை செய்வதால், கண்களில் உள்ள கழிவுகள் வெளியேறிவிடும்.

சிறிது உப்பை கொதிக்கும் நீரில் சேர்த்து கொதிக்க விட்டு, பின் அந்த கலவையை பஞ்சில் நனைத்து கண்களின் மேல் வைத்து வந்தால், கண்களில் உள்ள கிருமிகள் அழிந்து விரைவில் குணமாகும். தயிர் கூட மெட்ராஸ் ஐக்கு நல்ல நிவாரணத்தைத் தரும். அதற்கு தயிரை கண்களின் மேல் தடவி வர வேண்டும்.

ப்புறம் ஒரு மேட்டர். இந்த கைவைத்தியங்கள் எல்லாம், நம்ம உடல் நலன், கண் பார்வைத் திறனுக்கு ஏற்ப ஆளுக்கு ஆள் மாறுபடலாம். ஆக, மேற்படி வைத்தியங்களை மேற்கொள்கிறதுக்கு முன்பாக, உள்ளூரில் ஒரு நல்ல சித்தா டாக்டரை பார்த்து உங்கள் உடல் நலன் குறித்து ஒருமுறை உறுதி செய்து கொள்வது நல்லது. ரைட்டா?

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

6 கருத்துகள்:

  1. மையப்புள்ளிக்கு வாழ்த்துக்கள்... ஹா... ஹா...

    குறிப்புகள் பயன் தருபவை... நன்றி...

    பதிலளிநீக்கு
  2. பூனைக்குட்டியார் தான் தென் தமிழகத்தின் மெட்ராஸ் ஐ ன் கொள்கைபரப்பு செயலாளர் போல.......வராமல் இருக்க என்ன வழி என மியாவ் மிடவும்.

    பதிலளிநீக்கு
  3. பூனைக்குட்டியாரிடம் சிறு சந்தேகம். இது அனைத்தையும் சாப்பிடும் முன் செய்ய வேண்டுமா?? அல்லது சாப்பிட்ட பின்பா???

    பதிலளிநீக்கு
  4. காலத்திற்கேற்ற கட்டுரை சார்.அருமை

    பதிலளிநீக்கு
  5. சிறப்பான தகவல் கிடைத்தது

    பதிலளிநீக்கு
  6. தீர்வுகளுக்கான டிப்ஸ் அருமை சார்

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...