ஞாயிறு, 30 நவம்பர், 2014

கிரிக்கெட்டை தாக்கும் புதிய பவுன்சர்கள்!ட்டமிழக்காமல் 63 - ஆடுகளத்தில், பிலிப் ஹியூஸ் கடைசியாக எடுத்த ரன்கள். அந்தப் போட்டியில் அவர் ஆட்டமிழக்கவில்லை. நமக்குத் தெரியும். ஆனால், 63வது ரன்னுக்குப் பிறகு, ஆட்டமிழக்காமலேயே களத்தில் இருந்து வெளியேறுகிறோம் என்று பிலிப் ஹியூஸ் உணர்ந்திருக்க மாட்டார். அடுத்து ஒரு ரன் இனி சேர்க்கவே முடியாது என்றும் அவருக்குத் தெரிந்திருக்காது.
 கிரிக்கெட்டின் மிக அபாயமான ஒரு எகிறு பந்து (பவுன்சர்) அவரது வாழ்க்கையை முடித்து வைத்து விட்டது. சாதிப்பதற்கு இன்னும் நிறைய திறமை இருந்தது. ஆனால், 25 வயதிலேயே வாழ்க்கை முடிந்து விட்டது. பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு சில தினங்கள் பாக்கி இருக்கையில்!

சனி, 29 நவம்பர், 2014

கேரளாவும்... பெரியாறு அணை கப்சாக்களும்!

* பெரியாறு அணை இடிந்து விடும்; தகர்ந்து விடும்.
* ஐந்து மாவட்டங்கள் தண்ணீரில் மூழ்கி விடும்.
* 30 லட்சம் மக்கள் ஜலசமாதி ஆகி விடுவார்கள்.
* 132 அடி நீர்மட்டத்தை 106 அடியாக குறைக்க வேண்டும்...

- ஒன்றா, இரண்டா... கேரளாவின் / கேரள அரசியல்வாதிகளின் பொய், புரட்டுக்கள். இன்றைக்கு அத்தனை பேரும் கப்-சிப். 142 அடிக்கு மேல்  தேங்கியும் கொஞ்சமும் அசராமல் ‘நான் ரெடி... நீங்க ரெடியா?’ என 152 அடிக்கு தயாராக நிற்கிறது பென்னிகுக் கட்டிய பெரியாறு அணை.

ஞாயிறு, 23 நவம்பர், 2014

அருவா.. கிருவா... தூக்கலாமா?


(தமிழ் இலக்கணத்தை எளிய நடையில் இளைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்துகிற தொடர்)

நீர் இருக்கும் வரை... நீர் இருப்பீர்!


தென்மாவட்டத்து தமிழர்களுக்கு இது மகத்தான தருணம். 35 ஆண்டுகால கனவொன்று நனவாகியிருக்கிறது. பசி / தாகம் தீர்க்கிற பெரியாறு அணை,  இடையூறுகள் பல கடந்து 142 அடி உயரத்தை தொட்டிருக்கிறது. தேனி மாவட்டத்து, கம்பம் பள்ளத்தாக்கு மக்கள் பொங்கல் வைத்துக் கொண்டாடுகிறார்கள்.
 தனது உழைப்பாலும், தியாகத்தாலும் பெரியாறு அணையை உருவாக்கித் தந்து, தமிழர் பூமியின் தாகம் தீர்த்த கர்னல் ஜான் பென்னிகுக் பற்றி தெரிந்து  கொள்வது இந்தத் தருணத்தின் முக்கிய கடமை. இந்தக் கட்டுரை மூலம்... அவருக்கு தனது நன்றியை சமர்ப்பிக்கிறது பூனைக்குட்டி!

புதன், 5 நவம்பர், 2014

கண்ணை தாக்கும் ‘சென்ஐ!’


சிகப்பு பொதுவாக புரட்சியின் நிறமாகக் குறிப்பிடப்படுவதுண்டு. பழைய கால சினிமாக்களில் ‘என் குடும்பத்தை அழிச்ச ஒன்ன பழிவாங்காம விடமாட்டேன்டா...’ என்று கேப்டன் ஆத்திரப்படுகையில், சிகப்பு பெயிண்ட் பூசியிருப்பார்களோ என்று சந்தேகம் கொள்ளத்தக்க வகையில் அவரது கண்கள் சிவ ந்திருக்கும். கண்கள் சிவக்கையில், கேப்டன் போலவே இருக்குதே என்று சந்தோஷம் வேண்டாம். நல்ல கண் டாக்டரை பார்த்தல் அவசியம். காரணம்,  ஊரெல்லாம் ‘சென்ஐ’ (மெட்ராஸ் பெயரை மாத்தி எவ்ளோ நாளாச்சு! இன்னும் என்ன மெட்ராஸ் ஐ?) எனப்படுகிற கண் வலி படையெடுத்துப் பரவி  வருகிறது.

சனி, 1 நவம்பர், 2014

142 நிச்சயம்; 152 லட்சியம்!


கேரளா எவ்வளவோ போராடிப் பார்த்தது. தகிடுதத்தங்கள் செய்தது. ம்ஹூம்... பலனில்லை. உடைந்து விடும், தகர்ந்து விடும்... உலகமே அழிந்து விடும் என்றெல்லாம் கப்சா விட்டவர்கள், கதை எழுதி படம் எடுத்து பணம் பார்த்தவர்கள் அத்தனை பேர் முகத்திலும் அடுப்புக்கரி பூசி விட்டது முல்லைப் பெரியாறு. 136 அடியைக் கடந்து விட்டது. 142 அடியை நோக்கி கம்பீரமாக உயர்ந்து கொண்டிருக்கிறது.

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...