சனி, 29 மார்ச், 2014

காங்கிரசை ஏன் புறக்கணிக்கவேண்டும்?

டில்லிக்கும், தமிழகத்துக்குமான தூரம் முன்னெப்போதையும் விட அதிகமாகி விட்டது. டில்லி - கொழும்பு இடையிலான தூரம் குறைந்திருப்பது அதற்குக் காரணமாக இருக்கலாம்.


 225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை பாராளுமன்றம் ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்வு செய்யப்படுகிறது. அதிகாரத்தைப் பிடிப்பதில், இப்போதைக்கு அங்கு ராஜபட்சேவுக்கு பெரிதாக போட்டியில்லை. காரணம், அவரைத் தவிரவும் நம்பகமான ஆளாக, சிங்களர்கள் வேறு யாரையும் நினைக்கவில்லை. ஒருவேளை, டில்லியில் இருந்து அடுத்துக் கிளம்புகிற விமானம் பிடித்து காங்கிரஸ் கட்சியும், மன்மோகனும், சோனியாவும், - அதிகாரக் கனவில் மீடியாக்களுக்கு நாளொரு போஸ் கொடுத்துக் கொண்டிருக்கிற - ராகுல்காந்தியும் கொழும்பு போய் இறங்குவார்களேயானால்.... ராஜபட்சேவுக்கு நிஜமான நெருக்கடி. அன்றைக்கு ஆரம்பமாகும்!

சிங்களவர்களுக்கு சாதகமான பிராந்திய சூழல்களை உருவாக்குவதிலும், அவர்களது அத்துமீறல், மனித உரிமை மீறல், உலகமகா பாவச்செயல்களை மூடி மறைத்து, சர்வதேச கண்டிப்பில் இருந்து காப்பாற்றுவதிலும் இன்றைக்கு ராஜபட்சேவைக் காட்டிலும் நம்பமான ஆட்கள், மேற்படி பாராவில் படித்த டில்லி ஆட்கள். ஆக, இவர்கள் கொழும்பு போவார்களேயானால், சிங்களவர்கள், தங்கள் எதிர்கால நன்மைகள் கருதி, கண்களை மூடிக் கொண்டு ‘கை'யில் குத்தி, பாராளுமன்றத்துக்குத் தேர்வு செய்கிற வாய்ப்புகள் மிக அதிகமாகவே இருப்பதாக ‘சர்வதேச அரசியல் நிபுணர்கள்' சத்தியமடிக்கிறார்கள். காங்கிரஸ் காரர்கள் இலங்கைக்குச் செல்வது, சிங்களர்களுக்கு எவ்வளவுக்கு எவ்வளவு நன்மையோ... அதற்கு சற்றும் குறையாத அளவுக்கு தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் மேலதிக நன்மைகள் இருக்கின்றன.

சென்னைக்கு சில கிலோ மீட்டர் தொலைவில் பதிந்திருக்கிற தமிழ் மாநில எல்லைக்கு அப்பால் இருக்கிற பிற மாநிலங்களுக்கு எப்படியோ... தெரியவில்லை. காங்கிரஸ் கட்சியை நினைவுகளின் தடத்தில் இருந்து நிரந்தரமாக நீக்குவது மண்ணுக்கும், மக்களுக்கும் நன்மை தருகிற செயலாகவே, தமிழ் மக்கள் நம்புகிறார்கள். இந்த நம்பிக்கைக்கு பின்னணியில் சில திடகாத்திரமான காரணிகள் இருக்கின்றன.
 அவற்றைப் பட்டியலிட்டால், காங்கிரஸ் சமீபத்தில் வெளியிட்டிருக்கிற தேர்தல் அறிக்கையைக் காட்டிலும் அதிகப் பக்கங்கள் கொண்டதாக இருக்கும். என்பதால், தமிழக  மக்களும், தமிழகமும் காங்கிரசை ஏன் புறக்கணிக்க வேண்டும் என்பதற்கான ‘நறுக் - சுருக்' பட்டியல் இங்கே.


(பின்குறிப்பு: பட்டியலை வளர்க்க விரும்புவோர் தாராளமாக செய்யலாம். பூனைக்குட்டிக்கு யாதொரு  ஆட்சேபணையும் இல்லை).

* தங்கள் சுயநல அரசியலுக்காகவே செய்தாலும் கூட, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இலங்கைக்கு எதிராக ஒரு சர்வதேச தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபையில் மீண்டும், மீண்டும் கொண்டு வந்து, இலங்கைக்கு ஒரு நிர்பந்தத்தை ஏற்படுத்துகின்றன. அந்தத் தீர்மானங்களை முறியடிக்கிற அல்லது முனை மழுங்கிப் போகச் செய்கிற வேலையை, இந்திய காங்கிரஸ் அரசு மீண்டும், மீண்டும் மிகச் சிறப்பாகவே செய்து கொண்டிருக்கிறது. மார்ச் 27ம் தேதி ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா முற்றாகவே புறக்கணித்து, தனது விசுவாசத்தையும், அடையாளத்தையும் பசை தடவி ஒட்டி, இலங்கைக்கு நிரூபித்திருக்கிறது.

* புறக்கணிப்புக்கான காரணமாக ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி திலிப் சின்ஹா இப்படிச் சொல்கிறார்... ‘‘இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்து விசாரணை, மதிப்பீடு, கண்காணிப்பு ஆகியவற்றை ஐநா மனித உரிமை கவுன்சில் மேற்கொள்ள வேண்டும் என தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது, பிற நாட்டின் விவகாரங்களில் தலையிடுவதாகவும், அதன் இறையாண்மையைக் குலைப்பதாகவும் அமைந்துள்ளது. இதுபோன்ற அணுகுமுறைகளை இந்தியா ஒருபோதும் ஆதரிக்காது."
- பிற நாட்டின் விவகாரங்களில் தலையிட விரும்பாத இந்தியா, கிழக்கு பாகிஸ்தான் விவகாரத்தில் தலையிட்டது ஏன்? மிக சமீபத்தில் மாலத்தீவு நாட்டின் உள் விவகாரத்தில் தலையிட்டு, மூக்கை உடைத்துக் கொண்டது ஏன் என்று திலிப் சின்ஹா விளக்கம் அளித்தால், நன்றாக இருந்திருக்கும்.

* ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை, இறுதிக்கட்ட போர் நடந்த இடங்களில் நேரடியாக ஆய்வு செய்து, இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்து நம்பகத்தகுந்த விசாரணை தேவை என கூறியிருக்கிறார். ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை கமிஷனரின் கருத்துக்கு, இந்தியா பதிலென்ன வைத்திருக்கிறது?
* இலங்கை தமிழர் விவகாரம் மட்டுமல்ல... தமிழக மீனவர்கள் தாக்கப்படுகிற / சுடப்படுகிற விவகாரம், கச்சத்தீவு, முல்லைப் பெரியாறு அணை, காவிரி தண்ணீர், நிரபராதித் தமிழர்களின் தூக்குத்தண்டனை விடுவிப்பு என தமிழகம் சார்ந்த எந்தப் பிரச்னையாக இருந்தாலும்... காங்கிரஸ் கட்சிக்கு ஒரே கொள்கை, ஒரே கோட்பாடுதான். அது, தமிழர் எதிர்ப்பு நிலைப்பாடு.

* மேற்குத் தொடர்ச்சி மலையைப் பாதுகாக்க வலியுறுத்துகிற கஸ்தூரி ரங்கன் அறிக்கைக்கு எதிராக கேரள சேட்டன்மார்கள் கடும் கோபத்துடன் கிளர்ந்தெழுந்ததும், வாலைச் சுருட்டி காலுக்குள் வைத்துக் கொண்டு பதுங்கிப் போன காங்கிரஸ் டேஞ்சரர்ஸ்.... தமிழர்கள் விஷயம் என்றால் மட்டும், புதிது, புதிதாக தத்துவங்கள் பேசுகின்றனர்.

வாருங்கள்... ஏப்ரல் 24க்காக காத்திருப்போம்!

- பூனைக்குட்டி -

3 கருத்துகள்:

  1. மிக நல்ல பதிவு. எருமை மாட்டின் மீது மழை பெய்தததைப் போல எத்தனை பிரச்சனைகளையும் கண்டு கொள்ளாமல் ஒதுங்கிக் கொள்ளும் காங்கிரசின் கொள்கைகளுக்கு நாடாளுமன்றத்தில் ஒத்து ஊதும் பாஜகவின் கொள்கையும் ஒன்றாக உள்ளது என்பதை உணராவிட்டால் நாட்டிற்கு பேராபத்து
    -ப.கவிதா குமார்.மதுரை

    பதிலளிநீக்கு
  2. இரா.சிவக்குமார்29 மார்ச், 2014 அன்று PM 3:07

    அன்பு பூனைக்குட்டிக்கு,

    வணக்கம்!

    எழுத்தில் தவழும் எள்ளலும், நையாண்டியும் கட்டுரை வாசிப்பில் மேலும் மேலும் ஆவலைத் தூண்டுகிறது. 'காங்கிரஸ்' என்ற பெயரில் வலம் வரும் எல்லாப் பிணந்தின்னிகளுக்கும், தமிழனின் பிணம் என்றால் கொஞ்சம் கூடுதல் ஈர்ப்பிருக்கத்தான் செய்கிறது. இத்தாலி சோனியாவிலிருந்து, எச்சிக்கலை ப.சி மற்றும் அவரது மகன் கா.சி.வரைக்கும் இதில் எவரும் விதிவிலக்கல்ல. கருப்பையாவின் மகன் வாசன் வரைக்கும் இது பொருந்தும்.

    ஆனால் இந்தக் கழிசடைகளை அப்புறப்படுத்தும் நேர்மையான, துணிச்சலான, உணர்வுள்ள சக்தி தமிழகத்தில் இன்னமும் (சில விமர்சனங்களுக்கு உட்பட்டு வைகோ தவிர) உருவாகவில்லை. வரும் தேர்தலில் காங்கிரஸ் கரை வேட்டி கட்டிக் கொண்டு எவன் வந்தாலும் அவனை செருப்பால் அடிக்கின்ற உணர்வு வருகின்றவரை இங்கு எவனும் தமிழனுமில்லை, மனிதனுமில்லை...

    நிற்க!

    தங்களின் எழுத்துக்களில் மிளிரும் உணர்வினைப் பார்த்து மகிழ்ந்தேன்.

    தமிழனுக்கு சொரணை உண்டாக்கும் தங்களின் திருப்பணி தொடரட்டும்!

    அன்புடன்

    இரா.சிவக்குமார்

    பதிலளிநீக்கு
  3. இரா.சிவக்குமார்29 மார்ச், 2014 அன்று PM 3:08

    அன்பு பூனைக்குட்டிக்கு,

    வணக்கம்!

    எழுத்தில் தவழும் எள்ளலும், நையாண்டியும் கட்டுரை வாசிப்பில் மேலும் மேலும் ஆவலைத் தூண்டுகிறது. 'காங்கிரஸ்' என்ற பெயரில் வலம் வரும் எல்லாப் பிணந்தின்னிகளுக்கும், தமிழனின் பிணம் என்றால் கொஞ்சம் கூடுதல் ஈர்ப்பிருக்கத்தான் செய்கிறது. இத்தாலி சோனியாவிலிருந்து, எச்சிக்கலை ப.சி மற்றும் அவரது மகன் கா.சி.வரைக்கும் இதில் எவரும் விதிவிலக்கல்ல. கருப்பையாவின் மகன் வாசன் வரைக்கும் இது பொருந்தும்.

    ஆனால் இந்தக் கழிசடைகளை அப்புறப்படுத்தும் நேர்மையான, துணிச்சலான, உணர்வுள்ள சக்தி தமிழகத்தில் இன்னமும் (சில விமர்சனங்களுக்கு உட்பட்டு வைகோ தவிர) உருவாகவில்லை. வரும் தேர்தலில் காங்கிரஸ் கரை வேட்டி கட்டிக் கொண்டு எவன் வந்தாலும் அவனை செருப்பால் அடிக்கின்ற உணர்வு வருகின்றவரை இங்கு எவனும் தமிழனுமில்லை, மனிதனுமில்லை...

    நிற்க!

    தங்களின் எழுத்துக்களில் மிளிரும் உணர்வினைப் பார்த்து மகிழ்ந்தேன்.

    தமிழனுக்கு சொரணை உண்டாக்கும் தங்களின் திருப்பணி தொடரட்டும்!

    அன்புடன்

    இரா.சிவக்குமார்

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...