சனி, 27 டிசம்பர், 2014

‘இச்.. இச்...’ எந்தெந்த இடத்தில் சரி?

மொழி என்பது, உணர்வுகளை வெளிப்படுத்துகிற கருவி. சொல்ல வருகிற பொருளை / விஷயத்தை வெளிப்படுத்துவதற்கு உறுதுணையாக நிற்பது சொல். எழுத்துக்களின் திரட்சியே சொல். ஒரு எழுத்து தனித்து நின்றோ அல்லது பல எழுத்துக்கள் ஒன்றாகச் சேர்ந்தோ பொருள் தருமானால், அது சொல். தனி ஒரு எழுத்தே கூட தமிழில் சொல்லாக மாறி பொருள் தருவதும் உண்டு.

புதன், 24 டிசம்பர், 2014

ஐயப்பா... ஏதாகிலும் செய்யப்பா!

டந்தவாரத்தில் ஒரு பின்னிரவு. அலுவலகப் பணி முடித்து, அதிகப்படியான பனியில் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். வருகிற வழியில் ஒரு ஐயப்பன் கோயில். வெகு தூரத்தில் இருந்து அதை நெருங்கிக் கொண்டிருக்கும் போதே, கோயில் ஸ்பீக்கர்களில் இருந்து உரத்துக் கசிந்து வந்த அந்தப் பாடல், கொடும்  பனியையும் கடந்து என்னை கொஞ்சம் திடுக்கிட்டு நடுங்கச் செய்தது. மிக சமீபத்தில் வெளியாகி, டாஸ்மாக் பார்கள், தனியார் பஸ்கள், இளைஞர்கள் உல்லாசமாக சங்கமிக்கிற இடங்களில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிற படு பயங்கர குத்தாட்டப் பாடல் அது. ஐயப்பன் கோயிலில், குத்துப் பாடலு க்கென்ன வேலை என்கிற மனக் கிலேசத்துடன் கோயிலை இன்னும் நெருங்கினேன்.

ஞாயிறு, 21 டிசம்பர், 2014

சூப்பர் காப்பி ஸ்டார்!

‘திருட்டு டிவிடியில் படம் பார்க்காதீர்கள்’ என நடிகர்ஸ், இயக்குனர்ஸ் உங்களுக்கு சேதி அனுப்புகிறார்களா...? ரைட். நீங்கள் செய்யவேண்டியது இதுதான்.  ‘ஆங்கில டிவிடிகளை பார்த்து திருடுவதை நீங்கள் நிறுத்துகிற நாளில், திருட்டு டிவிடியில் படம் பார்ப்பதை நாங்களும் நிறுத்திக் கொள்கிறோம்...’ என்று  பதில் சேதி அனுப்புங்கள். இந்த ஜென்மத்தில், திருட்டு டிவிடி பற்றி இனி அவர்கள் வாய் திறக்கமாட்டார்கள்.

இலவ் பண்ணலாமா...?

மிழ் இலக்கணத்தைப் பொருத்த வரை, ‘அளபெடை’ என்பது நாரை பறக்க முடியாத நாற்பத்து எட்டு மடை கண்மாய் சைஸூக்கு பிரமாண்டமான சப்ஜெக்ட். அதில் இருந்து கடந்த வாரம் ஒரே ஒரு கைப்பிடி அளவு மட்டுமே ருசி பார்த்தோம் (இது, தமிழ் இலக்கணத்தை அறிமுகம் செய்கிற தொடர் மட்டுமே என்பதால்). லிமிடெட் மீல்ஸ் போல அது பசி தீர்க்கவில்லை என நிறையப் பேர் ஆதங்கப்பட்டதால், இந்த வாரம் அளபெடையை மினி மீல்ஸாக பரிமாறுகிறோம்.

ஞாயிறு, 14 டிசம்பர், 2014

மதவெறி - ஒரு பொய்யும், ஒரு உண்மையும்!


தங்கள், மனிதனை நல்வழிப்படுத்துகின்றனவா...? விவாதங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அறுதியிட்டு கூறுகிற அளவுக்கு இதுவரை பதில்  கிடைத்தபாடில்லை. ஆனால், மதவெறி...?
அது நிச்சயம் அழிக்க மட்டுமே வல்லது. டைனோஸர்களின் காலம் முடிந்து, மனித இனம் மண்ணில் கால் பதித்த  நாள் துவங்கி இன்றைக்கு வரைக்கும், மதவெறி... அழிவை மட்டுமே தந்து கொண்டிருக்கிறது. சத்தியம் செய்கிற அளவுக்கு நிச்சய உண்மை.

‘ஆ’ என்றால் முட்டும்; ‘ஊ’ என்றால் ருசிக்கும்!

(தமிழ் மீது பேரன்பு கொண்டவர்கள், கரை கண்டவர்களுக்கானது அல்ல இந்தப்பகுதி.
 ஃபேஸ் புக், ட்விட்டர் என மொழியின் மரபுகளில் இருந்து விலகி வெளியே சென்று கொண்டிருக்கிற அடுத்த தலைமுறையினருக்கு, நமது மொழியை ‘அவர்களது மொழியில்’ கொண்டு சேர்க்கிற எளிய முயற்சி.)

சனி, 6 டிசம்பர், 2014

திங்கள், 1 டிசம்பர், 2014

எச்.ராஜா... எப்பூடி?

பாரதிய ஜனதா பார்ட்டியின் தேசியச் செயலாளர் எச்.ராஜா. சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்தவர். ‘வைகோ வீடு திரும்ப முடியாது’ என்று சமீபத்தில் பேட்டி கொடுத்து சர்ச்சை கிளப்பியவர். ஒரு தேசியக் கட்சியின், தேசியச் செயலாளர், உள்ளூர் கந்து வட்டி வசூல் ராஜா போல மிரட்டல் விடுத்து பேசுவது தமிழக அரசியலுக்கு புதுசு. அந்த வகையில், புது நாகரீகத்தை அறிமுகம் செய்ததற்காக அவரை செல்லூர் மார்க்கெட் ரவுடிகள் சங்கம் வாழ்த்தி வரவேற்கிறது.

ஞாயிறு, 30 நவம்பர், 2014

கிரிக்கெட்டை தாக்கும் புதிய பவுன்சர்கள்!



ட்டமிழக்காமல் 63 - ஆடுகளத்தில், பிலிப் ஹியூஸ் கடைசியாக எடுத்த ரன்கள். அந்தப் போட்டியில் அவர் ஆட்டமிழக்கவில்லை. நமக்குத் தெரியும். ஆனால், 63வது ரன்னுக்குப் பிறகு, ஆட்டமிழக்காமலேயே களத்தில் இருந்து வெளியேறுகிறோம் என்று பிலிப் ஹியூஸ் உணர்ந்திருக்க மாட்டார். அடுத்து ஒரு ரன் இனி சேர்க்கவே முடியாது என்றும் அவருக்குத் தெரிந்திருக்காது.
 கிரிக்கெட்டின் மிக அபாயமான ஒரு எகிறு பந்து (பவுன்சர்) அவரது வாழ்க்கையை முடித்து வைத்து விட்டது. சாதிப்பதற்கு இன்னும் நிறைய திறமை இருந்தது. ஆனால், 25 வயதிலேயே வாழ்க்கை முடிந்து விட்டது. பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு சில தினங்கள் பாக்கி இருக்கையில்!

சனி, 29 நவம்பர், 2014

கேரளாவும்... பெரியாறு அணை கப்சாக்களும்!

* பெரியாறு அணை இடிந்து விடும்; தகர்ந்து விடும்.
* ஐந்து மாவட்டங்கள் தண்ணீரில் மூழ்கி விடும்.
* 30 லட்சம் மக்கள் ஜலசமாதி ஆகி விடுவார்கள்.
* 132 அடி நீர்மட்டத்தை 106 அடியாக குறைக்க வேண்டும்...

- ஒன்றா, இரண்டா... கேரளாவின் / கேரள அரசியல்வாதிகளின் பொய், புரட்டுக்கள். இன்றைக்கு அத்தனை பேரும் கப்-சிப். 142 அடிக்கு மேல்  தேங்கியும் கொஞ்சமும் அசராமல் ‘நான் ரெடி... நீங்க ரெடியா?’ என 152 அடிக்கு தயாராக நிற்கிறது பென்னிகுக் கட்டிய பெரியாறு அணை.

ஞாயிறு, 23 நவம்பர், 2014

அருவா.. கிருவா... தூக்கலாமா?


(தமிழ் இலக்கணத்தை எளிய நடையில் இளைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்துகிற தொடர்)

நீர் இருக்கும் வரை... நீர் இருப்பீர்!


தென்மாவட்டத்து தமிழர்களுக்கு இது மகத்தான தருணம். 35 ஆண்டுகால கனவொன்று நனவாகியிருக்கிறது. பசி / தாகம் தீர்க்கிற பெரியாறு அணை,  இடையூறுகள் பல கடந்து 142 அடி உயரத்தை தொட்டிருக்கிறது. தேனி மாவட்டத்து, கம்பம் பள்ளத்தாக்கு மக்கள் பொங்கல் வைத்துக் கொண்டாடுகிறார்கள்.
 தனது உழைப்பாலும், தியாகத்தாலும் பெரியாறு அணையை உருவாக்கித் தந்து, தமிழர் பூமியின் தாகம் தீர்த்த கர்னல் ஜான் பென்னிகுக் பற்றி தெரிந்து  கொள்வது இந்தத் தருணத்தின் முக்கிய கடமை. இந்தக் கட்டுரை மூலம்... அவருக்கு தனது நன்றியை சமர்ப்பிக்கிறது பூனைக்குட்டி!

புதன், 5 நவம்பர், 2014

கண்ணை தாக்கும் ‘சென்ஐ!’

சிகப்பு பொதுவாக புரட்சியின் நிறமாகக் குறிப்பிடப்படுவதுண்டு. பழைய கால சினிமாக்களில் ‘என் குடும்பத்தை அழிச்ச ஒன்ன பழிவாங்காம விடமாட்டேன்டா...’ என்று கேப்டன் ஆத்திரப்படுகையில், சிகப்பு பெயிண்ட் பூசியிருப்பார்களோ என்று சந்தேகம் கொள்ளத்தக்க வகையில் அவரது கண்கள் சிவ ந்திருக்கும். கண்கள் சிவக்கையில், கேப்டன் போலவே இருக்குதே என்று சந்தோஷம் வேண்டாம். நல்ல கண் டாக்டரை பார்த்தல் அவசியம். காரணம்,  ஊரெல்லாம் ‘சென்ஐ’ (மெட்ராஸ் பெயரை மாத்தி எவ்ளோ நாளாச்சு! இன்னும் என்ன மெட்ராஸ் ஐ?) எனப்படுகிற கண் வலி படையெடுத்துப் பரவி  வருகிறது.

சனி, 1 நவம்பர், 2014

142 நிச்சயம்; 152 லட்சியம்!


கேரளா எவ்வளவோ போராடிப் பார்த்தது. தகிடுதத்தங்கள் செய்தது. ம்ஹூம்... பலனில்லை. உடைந்து விடும், தகர்ந்து விடும்... உலகமே அழிந்து விடும் என்றெல்லாம் கப்சா விட்டவர்கள், கதை எழுதி படம் எடுத்து பணம் பார்த்தவர்கள் அத்தனை பேர் முகத்திலும் அடுப்புக்கரி பூசி விட்டது முல்லைப் பெரியாறு. 136 அடியைக் கடந்து விட்டது. 142 அடியை நோக்கி கம்பீரமாக உயர்ந்து கொண்டிருக்கிறது.

சனி, 25 அக்டோபர், 2014

ரஜினின்னா ‘லகலக’ கிளவின்னா ‘கலகல’


(இணையத்தில் எப்போதும் மேய்ந்து கொண்டிருக்கிற இளைய தலைமுறைக்கு, நமது மொழியை, அவர்களுக்கான நடையில் அறிமுகப்படுத்துகிற எளிய முயற்சி இது.)


செவ்வாய், 21 அக்டோபர், 2014

ப்ரீதம் சட்டையில் தமிழ்!


பெயர் - ப்ரீதம் முண்டே, வயது 32. மருத்துவம் படித்திருக்கிறார். டாக்டர் வேலை பார்க்கவோ... மருந்து, மாத்திரை கொடுக்கவோ நேரம்தான் இல்லை. குடும்பப் பின்னணி அப்படி. அப்பா ஒரு விஐபி. ஆனால், இப்போது இல்லை. அவர் பெயர் கோபிநாத் முண்டே. இப்போது ஞாபகம் வந்திருக்கலாம். பாஜ கட்சியில் மூத்த தலைவர். மத்தியில் பாஜ ஆட்சிக்கு வந்ததும். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரானார். அவர் நேரம், அமைச்சர் பதவியேற்ற சில நாளில், சாலை விபத்தில் எதிர்பாராதவிதமாக மரணமடைந்தார்.


சனி, 18 அக்டோபர், 2014

பெண்களின் கூந்தலில் மணம் ‘வீசுமா?’



(இது ‘இணைய தலைமுறை’ இளவட்டங்களுக்கு தமிழை அறிமுகப்படுத்தும் பகுதி. கொஞ்சம் அப்டிக்கா... இப்டிக்கா... இருக்கும் ப்ரோ. எச்கூச்மீய்ய்!)

ஞாயிறு, 12 அக்டோபர், 2014

தெலுங்கரசியை தெரியுமா?


(தமிழ் மீது பேரன்பு கொண்டவர்கள், கரை கண்டவர்களுக்கானது அல்ல இந்தப்பகுதி. ஃபேஸ் புக், ட்விட்டர் என மொழியின் மரபுகளில் இருந்து விலகி வெளியே சென்று கொண்டிருக்கிற அடுத்த தலைமுறையினருக்கு, நமது மொழியை ‘அவர்களது மொழியில்’ கொண்டு சேர்க்கிற எளிய முயற்சி.)


வெள்ளி, 10 அக்டோபர், 2014

‘இணைய தலைமுறை’ இளைஞர்களுக்காக!

விலங்கில் இருந்து மனிதனை வேறுபடுத்திக் காட்டுவது, அவன் பேசுகிற மொழி. உலகில் உள்ள மொத்த மொழிகளின் எண்ணிக்கை 6809. இவற்றில் 700க்கும் குறைவான மொழிகளில் மட்டுமே பேசவும், எழுதவும் முடியும். சுமார் 100 மொழிகள் மட்டுமே சொந்த வரி வடிவத்தில் எழுதப்படுகின்றன. உலக மொழிகளுக்கெல்லாம் தாயாக, வேராக, மூலமாக இருப்பவை ஆறு மொழிகள். அவை ஹீப்ரு, கிரீக், லத்தீன், சமஸ்கிருதம் - இந்த நான்கும் வெகுஜன பயன்பாட்டில் இன்று இல்லை - மற்றும் தமிழ், சீனம். இவை ஆறும் செம்மொழிகள் என்ற உயர் பெருமைக்குரியன. இவற்றிலும் கூட, சீன மொழி ஏறக்குறைய மறைந்து, மான்டரீன் மொழி மட்டுமே அங்கு மக்கள் பயன்பாட்டில் இன்று நிற்கிறது என்பது கூடுதல் தகவல்.

வியாழன், 9 அக்டோபர், 2014

மக்களின் முதல்வரும்... சிக்கலில் மக்களும்!

ம்மாவை விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வீடுகளில் உணவு சமைக்க மறுத்து ஒரு நாள் போராட்டம் - இந்த ஒரு அறிவிப்பு மட்டும்தான் அனேகமாக பாக்கி. மற்றபடி எல்லாமே ரவுண்டு கட்டி நாளொன்றாக வந்து கொண்டிருக்கிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் கறார் ஜட்ஜ் ஜான் மைக்கேல் டி குன்ஹா கொளுத்திப் போட்ட வெடி, ஆயிரம் வாலா சரவெடியாக தமிழகத்தில் தொடர்ந்து வெடித்துக் கொண்டே... இருக்கிறது.

திங்கள், 31 மார்ச், 2014

‘இனம்’ அல்ல... ‘ஈனம்!’


இந்தியாவின் முன்னணி சினிமா ஒளிப்பதிவாளர்களில் குறிப்பிடத்தகுந்தவர் சந்தோஷ் சிவன். மலையாளத்துக் காரர். உலகத்தர நேர்த்தி மூலம் இந்திய சினிமாக்களுக்கு புது அடையாளம் தந்தவர். சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும் விருதுகளை போகிற போக்கில் அள்ளிக் குவித்தவர். ஒளிப்படக் கலைஞராக மட்டுமின்றி, இயக்குனராகவும் அடையாளப்படுத்தி, தன்னை ஒரு படைப்பாளியாகவும் பதிவு செய்திருப்பவர். அவர் ஒளிப்பதிவு செய்கிறார் என்றால், அந்தப் படம் தானாகவே, தனி மதிப்பு பெற்று விடுகிறது. சந்தோஷ் சிவன் குறித்த பெருமைகளை பற்றி மட்டுமே தனியாக ஒரு கட்டுரை எழுதலாம்.
- எல்லாம் சரி... பார்ப்பதற்கு பளபளப்பாக இருக்கிறது, வழுவழுப்பாக இருக்கிறது, புது நிறமாக இருக்கிறது என்பதற்காக, பாம்பைத் தூக்கி தோளிலா விடமுடியும்?

சனி, 29 மார்ச், 2014

காங்கிரசை ஏன் புறக்கணிக்கவேண்டும்?

டில்லிக்கும், தமிழகத்துக்குமான தூரம் முன்னெப்போதையும் விட அதிகமாகி விட்டது. டில்லி - கொழும்பு இடையிலான தூரம் குறைந்திருப்பது அதற்குக் காரணமாக இருக்கலாம்.

அம்மானா சும்மா இல்லடா!


க்களவைத் தேர்தலில், அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணனுக்கு ஆதரவு திரட்டுவதற்காக, முதல்வர் ஜெயலலிதா  (எனப்படுகிற அம்மா) மதுரை வந்திருந்தார். அம்மாவைப் பார்ப்பதற்கு பூனையும் போயிருந்தது. அங்கே கிடைத்த சில  வித்தியாச ‘க்ளிக்’ஸ், உங்கள் பார்வைக்காக, இங்கே.

வியாழன், 27 மார்ச், 2014

பேசும் படம் 3

லைக் கொடுங்க!


தார்த்த வாழ்க்கையில் நாம் கடந்து செல்கிற சோகத்தை, பாசத்தை, நட்பை, நகைச்சுவையை காட்சிப்படுத்தி, சுவை கூட்டுகிற வல்லமை புகைப்படங்களுக்கு மிக அதிகம் உண்டு. அன்றாடம் கண்ணில் படுகிற விஷயங்கள்தான். ஆனால், அதுவே புகைப்பட பதிவாக பார்க்கையில்... உள்ளூரப் புதைந்திருக்கும் புதிய பரிமாணங்கள் புரிய வருகிறது. ‘பூனைக்குட்டி’யின் பேசும்படம் - 3ஐ பாருங்கள். குறைந்தபட்சம், ‘வா...வ்’ என்றோ... ‘ஆ...வ்’ என்றோ ஒற்றை வார்த்தையிலாவது உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.



சனி, 22 மார்ச், 2014

பேசும் படம் 2

மனதின் ஓரம் வலிக்கிறதா...?


போரும்... அது தருகிற வலியும் அனுபவித்துப் பார்ப்பவர்களுக்கு மட்டுமே நரகம். மற்றவர்களுக்கு அது வெறும் செய்தி மட்டுமே. இலங்கையில் கொத்துக் கொத்தாக குழந்தைகள், பெரியவர்கள் கொன்று குவிக்கப்பட்ட போது... அந்தப் படங்களைப் பார்த்த போது நெஞ்சின் ஓரம் லேசாக வலித்திருக்கும். உள்ளுக்குள் மனிதம் மிச்சம் இருப்பதின் அடையாளம் அது. இப்போது கூட, கிரைமியா பிரச்னையை மையமாக வைத்து அமெரிக்கா தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொண்டு ரஷ்யா மீது புதிய போர் தொடுக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது. போர்களுக்கு எதிராக உலகம் உரத்து குரல் எழுப்ப வேண்டிய முக்கிய காலகட்டத்தில், அதன் வலியை உணர்த்துகிற இரு உலகப் புகைப்படங்கள் (நன்றி: கெட்டி இமேஜஸ், ஏஎப்பி) இங்கு பதிவு செய்யப்படுகின்றன. மனித வாழ்வியலின் வேதனை தருணங்கள், புன்னகை தருணங்கள்... அவையும் கூட பதிவாகியிருக்கின்றன. பாருங்கள். கருத்துக்களை (கட்டாயம்) எழுதுங்கள்.

வெள்ளி, 14 மார்ச், 2014

காப்பி ஹாசன்!




என்னதான் கோடி, கோடியாக வசூலை வாரிக் கொட்டிப் பார்த்தாலும் கூட... ரஜினி இன்னமும் உள்ளூர் நாயகன் மட்டுமே. விநியோகஸ்தர்கள் தலையில் அடிக்கடி குற்றாலத் துண்டு போர்த்துகிற ‘நம்மவர்’ தான் உலக நாயகன்... யூனிவர்சல் ஹீரோ. அதெப்பிடி சாத்தியம்???

வியாழன், 13 மார்ச், 2014

பேசும் படம் 1


படங்களுக்கு, வார்த்தைகளைக் காட்டிலும் வல்லமை அதிகம். பல நூறு வார்த்தைகள் விளக்க முடியாத ஒரு உணர்வை, ஒரே ஒரு படம் மக்கள் மனதில் சுலபமாக கொண்டு சேர்த்து விடும். பூனைக்குட்டியின், ‘பேசும் படம்’ பகுதியில் உலகத்தரம் வாய்ந்த (!?) உள்ளூர் படங்களின் வித்தியாச அணிவகுப்பு இனி களைகட்டும்!

சனி, 8 மார்ச், 2014

மதுரையும் சினிமாவும்!


பொழுது போக்கிடமற்ற மதுரைவாசிகளுக்கு இன்றளவும் துணை நிற்பவை தியேட்டர்களே. கவலைகள் தொலைக்கிற மந்திரம் தெரிந்த இக்கனவு அரங்கத்தை  தமிழகத்தில் அதிகம் கொண்ட நகரெனும் பெருமை மதுரைக்கு உண்டு. நகரின் ஒவ்வொரு தியேட்டருக்குள்ளும் ஒரு வரலாறு வாழ்கிறது. அந்த வரலாற்றின்  திசையில் ஒரு பயணம்...

புதன், 5 மார்ச், 2014

தமிழன் பெருமை சொல்லும் ‘தி கிராண்ட் அணைக்கட்!’


‘எங்கள் வாழ்வும், எங்கள் வளமும், மங்காத தமிழென்று சங்கே முழங்கு’ என்றார் பாரதிதாசன். தலைநிமிர்ந்து நாம் உலகுக்கு வழிகாட்டிய நாட்கள் போய் இன்று தண்ணீருக்குக் கூட கண்ணீர் சிந்தி அடுத்தவர்களை நம்பி பிழைக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. இடியும், உடையும் என கேரள அரசு திரும்பத் திரும்ப கிளப்புகிற முல்லைப் பெரியாறு அணை சர்ச்சைகளை நிபுணர்களும், வல்லுனர்களும் மீண்டும், மீண்டும் நிராகரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

எப்படி இருந்த நான்...?


இன்றைக்கு நாம் பார்க்கிற, வியக்கிற, பிரமிக்கிற இடங்களுக்கு... (கால இயந்திரத்தின் துணை இல்லாமலே) பின்னோக்கி அழைத்துச் செல்கிற பகுதி இது.  எப்படி இருந்த பகுதிகள்... இப்போது இப்படி இருக்கிறது பாருங்கள்!


திங்கள், 3 மார்ச், 2014

2.50 லட்சம் தபால் ஊழியர்களின் கண்ணீர் கதை!


ஊதிய உயர்வு அறிவிப்பு வெளியாக ஓரிரு நாட்கள் தாமதம் ஆனாலும் கூட போர்க்கொடி தூக்கி, போராட்டக் குரல் எழுப்புகிற அமைப்புகள் தெரிந்து கொள்ளவேண்டிய சேதி இது. பணியில் சேர்கிற முதல் மாதத்தில் வாங்குகிற அந்த சொற்ப ஊதியத்தில், அதற்குப்  பிறகு பெரிய அளவில் உயர்வேதும் இருக்காது. பணிகாலத்தின் கடைசி மாதம் வரை அதையே வாங்கி கஷ்ட ஜீவனம் நடத்தி விட்டு, ஓய்வுக்குப் பிறகு பென்ஷன், பிஎப் என எந்தச் சலுகையும் இன்றி வீட்டுக்குச் செல்கிற பரிதாபத்துக்குரியவர்களாக நடமாடிக் கொண்டி ருக்கிறார்கள் ஜிடிஎஸ் எனப்படுகிற கிராமப்புற தபால் ஊழியர்கள்.

கடலில் கரையும் கனவு...?


தமிழக மண்ணை வளப்படுத்துகிற திட்டம் என்றால்... அது முல்லைப்பெரியாறாக இருந்தாலும் சரி; சேது சமுத்திரமாக ஆனாலும் சரி, முட்டுக்கட்டை மேல் முட்டுக்கட்டைகள் விழுந்து இழுத்தடிக்கிற செயல்கள் இன்றுவரை தொடரத்தான் செய்கின்றன. 1860ம் ஆண்டு ஆங்கிலேயரால் துவக்கப்பட்ட சேது திட்டம்... 150 ஆண்டுகளைக் கடந்து, 2012 நடக்கிற இந்தத் தருணத்திலும் கூட, தூரத்துக் கனவாகவே காட்சியளிக்கிறது.

தென் தமிழகத்துக்கு மக்களின் பல்லாண்டு (நூற்றாண்டு!) கனவு என்றால்... சந்தேகத்திற்கிடமின்றி அது, சேது சமுத்திரம் திட்டம்தான். இந்தியப் பெருங்கடல் பகுதியைக் கடந்து செல்கிற கப்பல்கள், தேவையே இல்லாமல் இலங்கையையும் சுற்றிச் செல்கின்றன. இதனால், நேர விரயம், எரிபொருள் செலவு என்று மனித உழைப்பும், பணமும் எக்கச்சக்கமாய் வீணாகிறது. ‘தலையைச் சுற்றி மூக்கைத் தொடுகிற’ வேலைக்கு முற்றுப்புள்ளி வைக்க முதன்முதலில் முடிவு செய்தவர்... டெய்லர்.

என்ன சாதித்தார் ரஜினி?

‘‘இவன் பேருக்குள்ளே காந்தம் உண்டு உண்மைதானடா...’’ என்று ‘பாட்ஷா’ திரைப்படப் பாடலில் வரி ஒன்று வந்து போகும். டிசம்பர் 12ம் தேதி பிறந்த நாள் கொண்டாடிய ரஜினிகாந்த்தின் நீண்ட, நெடிய திரையுலகப் பயணத்தை ஒரு முறை மீள்பார்வை பார்க்கையில், அந்த வரிகளில் உண்மை இருக்கத்தான் செய்கிறது என்கிறது மனது. இருக்கலாம். இல்லாமலா, ஒரு தெய்வத்தை ஆராதிப்பது போல மாநிலம் முழுக்க டிசம்பர் 12ம் தேதி ரஜினி கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடக்கும்?

ஞாயிறு, 2 மார்ச், 2014

செயலற்ற பிரதமர்’ - கட்டுரை அல்ல... கட்டளை!

‘அண்டர் அச்சீவர்’ - இந்த வார்த்தை, இந்தியாவில் இப்போது பிரபலம். மவுனச்சாமியார் போன்ற அதே, வழக்கமான பிரதமர் மன்மோகன் சிங் புகைப்படத்தைப் போட்டு, படத்துக்கு மேலே இந்த வார்த்தையையும் பிரசுரித்திருக்கிறது அமெரிக்காவின் பிரபலமான ‘டைம்’ பத்திரிகை. அதுவும், அட்டைப்படத்தில். அது சம்பந்தமான விரிவான கட்டுரை உள்ளே இடம் பெற்றிருக்கிறது. விரிவான அந்த பல பக்க கட்டுரையின் ஒற்றை வரி சாராம்சம்தான் ‘அண்டர் அச்சீவர்’ அதாவது; செயலற்றவர்!

‘செயலற்ற பிரதமர்’ என்ற குற்றச்சாட்டு இன்று, நேற்றல்ல... மிக நீண்டகாலமாகவே மன்மோகன் மீது சுமத்தப்படுவது நாம் யாவரும் அறிந்த விஷயம். அது, ‘டைம்’ சொல்லித் தெரிகிற புதிய தகவல் அல்ல. ஆனால், ‘செயலற்ற பிரதமர்’ என இந்தியாவின் எதிர்க்கட்சிகளும், தலைவர்களும் குற்றம் சொல்கிற தொனிக்கும், ‘டைம்’ குரலுக்கும் நிறையவே வித்தியாசம் உண்டு. ‘டைம்’ சொல்லி விட்டது என்பதற்காக, மையமாய் தலையை ஆட்டி ஆமோதிப்பது, புத்திசாலித்தனமாக இருக்கமுடியாது. ‘டைம்’ பத்திரிகையின் இந்த திடீர் விமர்சனத்துக்குப் பின்புலமாக, மிகப்பெரிய சர்வதேச அரசியலும் இருக்கிறது.

வரைபடத்தில் இருந்து விடைபெறுது வால்பாறை?


மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கக் கூடிய விஷயத்தை ‘செவன்த் ஹெவன்’ (ஏழாவது சொர்க்கம்) என்று ஆங்கிலத்தில் அழைப்பது வழக்கம். தமிழக மலைவாசஸ்தலங்களைப் பொறுத்தவரை, கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறைக்கு ஏழாவது சொர்க்கம் என்ற பெயர் உண்டு. காரணம் இல்லாமல் இல்லை. மனதை கவரும் மலை முகடுகள், அழகு தவழும் அருவிகள், பார்க்கும் இடமெல்லாம் பச்சைப்பசேல் சோலைகள், கம்பளம் விரித்தது போன்ற தேயிலைத் தோட்டங்கள், உரசிச் செல்கிற மேகக்கூட்டங்கள், கோடை காலத்தில் கூட குளுகுளு பனிக்காற்று, நாசிக்குள் இறங்கும் கலப்படமற்ற ஆக்சிஜன் என, எவ்வளவு பெரிய சோர்வையும் போக்கி, புத்துணர்ச்சி தருகிற அற்புத உலகம் அது. அதனால்தான், அது ஏழாவது சொர்க்கம்.

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...